பரிஸ் : 54 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில்...!!

2 வைகாசி 2025 வெள்ளி 19:26 | பார்வைகள் : 2128
மே தின ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 54 பேர் இன்று இரண்டாவது நாளாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் சோசலிச கட்சியினர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதில் நான்கு அதிகாரிகள் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி தாக்குதலுக்கு சூத்திரதாரிய செயற்பட்ட ஒரு முக்கிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பரிஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் பட்டாசு தாக்குதல் மற்றும் கற்களை வீசி எறிந்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மீது வன்முறையில் ஈடுபட்டமை, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.