காஸா உதவிப்பொருள் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

2 வைகாசி 2025 வெள்ளி 17:22 | பார்வைகள் : 970
காஸாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் சுமார் 13 மாதமாக காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் காஸா மக்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லும் அனைத்து பாதைகளையும் அடைத்தது.
அத்துடன் உதவிப் பொருட்களை கொண்டு செல்ல தடையும் விதித்ததால், காஸா மக்கள் பலர் பட்டினியால் வாடி வருகின்றனர்.
இந்த நிலையில், காஸாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மால்டா அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் 12 ஊழியர்கள், 4 பொதுமக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், கப்பல் செல்ல முடியாமல் அதே இடத்தில் நிற்பதாகவும் மூழ்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.