Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸில் பஸ் விபத்து - சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி

பிலிப்பைன்ஸில் பஸ் விபத்து - சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி

2 வைகாசி 2025 வெள்ளி 13:11 | பார்வைகள் : 1992


வடக்கு பிலிப்பைன்ஸில் மிகவும் பரபரப்பான அதிவேக வீதிகளில் ஒன்றில் கட்டணம் அறவிடப்படும் வாயில் பகுதியில் பஸ் ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கான காரணம் என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


இந்த விபத்து  வியாழக்கிழமை (01) நிகழ்ந்துள்ளது.

சுமார்  100 கிலோ மீற்றர் (62 மைல்) சுபிக்-கிளார்க்-டார்லாக் அதிவேக வீதியில் பஸ்கள் பெரும்பாலும் மணிலாவிற்கும் அதனை சுற்றியுள்ள மாகாணங்களுக்கும் இடையே தொழிலாளர்களை ஏற்றிச் செல்கின்றன.

விபத்துக்குள்ளான பஸ்ஸை இடைநிறுத்த அந்நாட்டு போக்குவரத்து திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்தில் மூன்று விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் கொள்கலன் லொறி ஒன்றும் அடங்கும் என பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம்  பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்