பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்குத் தடை – கியூபெக் மாகாண அரசாங்கம்
2 வைகாசி 2025 வெள்ளி 08:58 | பார்வைகள் : 2062
ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தொலைபேசிகளை முற்றிலுமாக தடை செய்யப்படும் என க்யூபெக் மாகாணஅரசாங்கம், அறிவித்துள்ளது.
2024 ஜனவரியிலிருந்து வகுப்பறைகளுக்குள் செல்போன் பயன்பாடு ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது இந்த புதிய நடவடிக்கை பள்ளியின் தொடக்கம் முதல் நிறைவு, இடைவேளைகள் மற்றும் பள்ளி வளாக மைதானத்தில் கூட பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பெர்னார்ட் டிரைன்வில் (Bernard Drainville) எதிர்பார்க்கப்படுகிறார்.
ஊடகத்திற்கும் சமூக ஊடகங்களுக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல்-மன நலத்தில் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் முதலாவதாகும்.
அந்த குழுவின் முதல்கட்ட அறிக்கை ஏப்ரல் 22 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமைச்சர் டிரைன்வில், “இந்த அறிக்கையை மிகுந்த ஆர்வத்துடனும் திறந்த மனதுடனும் ஏற்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.


























Bons Plans
Annuaire
Scan