■ கைது எண்ணிக்கை 29 ஆக உயர்வு!!

1 வைகாசி 2025 வியாழன் 18:41 | பார்வைகள் : 742
பரிசில் இடம்பெற்ற மே தின ஆர்ப்பாட்டத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கைது எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிரான்சில் 300,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதை அடுத்து காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மாலை 5.30 மணி வரையான நிலவரப்படி பரிசில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் மரீன் லு பென், ஜோர்தன் பாதெல்லா மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.