Paristamil Navigation Paristamil advert login

மலேசியாவில் பேசும் பெண் கடவுளின் தரிசனத்திற்கு குவியும் மக்கள்

மலேசியாவில் பேசும் பெண் கடவுளின் தரிசனத்திற்கு குவியும் மக்கள்

1 வைகாசி 2025 வியாழன் 18:18 | பார்வைகள் : 144


திரும்பும் இடமெல்லாம் ஏஐ மயமாகி வரும் நிலையில் அதில் கடவுளும் விதிவிலக்கல்ல என்ற வகையில் மலேசியாவில் ஏஐ கடவுளை மக்கள் வணங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய உச்சமாக மாறியுள்ளது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு.

இணையம் ஏற்படுத்திய பாய்ச்சலை விட பல மடங்கு பல துறைகளிலும் ஏஐயின் செயல்பாடு அதிகரித்து வருகிறது.

கல்வி, வணிகம் தொடங்கி பட்டித்தொட்டி வரை பரவியுள்ள ஏஐ தற்போது கடவுள்களையும் விட்டுவைக்கவில்லை.

மலேசியாவில் முதன்முறையாக பெண் கடவுளை ஏஐ மூலம் உருவாக்கியுள்ளனர். மலேசிய, சீன மக்களிடையே கடல் தெய்வமான மசு என்கிற பெண் தெய்வம் அதிகம் வணங்கப்படும் தெய்வமாக உள்ளது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள தியான்ஹோ கோவிலில் மசு தெய்வத்தை ஏஐ முறையில் உருவாக்கி கொண்டு வந்துள்ளார்கள்.

நீங்கள் மசுவிடம் சென்று உங்கள் குறைகளை சொன்னால் அந்த ஏஐ தெய்வம் வாய் திறந்து உங்களுக்கு ஆறுதல் சொல்கிறது.

மசுவிடம் மனம் விட்டு பேசுவதற்கும், தரிசிப்பதற்கும் ஏராளமான பக்தர்கள் போட்டிப் போட்டு தியான்ஹோ கோவிலுக்கு செல்கிறார்களாம்.

இந்த வரவேற்பை பார்த்து வேறு சில கோவில்களிலும் இவ்வாறாக கடவுள்களை ஏஐ முறையில் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனராம்.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்