Paristamil Navigation Paristamil advert login

அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது

அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது

1 வைகாசி 2025 வியாழன் 17:19 | பார்வைகள் : 141


தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்ட விழா தான் ஒசாகா தமிழ் திரைப்பட விழா. அதாவது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை சர்வதேச திரைப்பட தளத்தில் பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும். மேலும் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையிலும், தமிழ் படங்களை சர்வதேச பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குனர் ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான விருது பட்டியல் வெளியாகி இருக்கிறது.

அதில் துணிவு திரைப்படத்திற்காக அஜித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விஜயின் லியோ படத்திற்கு 6 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. சிறந்த நடிகை – திரிஷா (லியோ)                                                                                                                                                                                                                 2. சிறந்த நடன இயக்குனர் – தினேஷ் மாஸ்டர் (லியோ)
3. சிறந்த எடிட்டர் – பிலோமின் ராஜ் (லியோ)
4. சிறந்த சண்டை பயிற்சியாளர் – அன்பறிவ் (லியோ)
5. சிறந்த ஒலிக் கலவை- என் ஒய் என் சி சினிமாஸ் ( லியோ)
6. சிறந்த ஒளிப்பதிவாளர் – மனோஜ் பரமஹம்சா ( லியோ)


மேலும் சிறந்த படமாக மாமன்னன் திரைப்படத்திற்கும், விடுதலை பாகம் 1 படத்திற்காக சிறந்த இயக்குனராக வெற்றிமாறனுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர இயக்குனர் நெல்சன் (ஜெயிலர்) , விக்னேஷ் ராஜா (போர் தொழில்) ஆகியோருக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தது விமர்சன ரீதியாக சிறந்த படமாக குட் நைட் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சிறந்த என்டர்டெயினர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்