Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய இராணுவத்தில் பிரெஞ்சு வீரர்கள்.. புட்டினின் சர்ச்சைக் கருத்து!!

ரஷ்ய இராணுவத்தில் பிரெஞ்சு வீரர்கள்.. புட்டினின் சர்ச்சைக் கருத்து!!

1 வைகாசி 2025 வியாழன் 10:00 | பார்வைகள் : 536


ரஷ்ய இராணுவத்தில் பிரெஞ்சு வீரர்கள் இருப்பதாகவும், யுக்ரேனுக்கு எதிராக போரில் அவர்கள் சண்டையிடுவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய-யுக்ரேன் யுத்ததில் பிரான்ஸ் யுக்ரேனுக்கு சார்பாக உள்ளமை அறிந்ததே. இந்நிலையில், நேற்று ஏப்ரல் 30, மேற்படி கருத்தினை அதிபர் புட்டின் தெரிவித்தார். ரஷ்ய இராணுவத்தினரோடு இணைந்து பிரெஞ்சு இராணுவத்தினரும் சண்டையிடுவதாக தெரிவித்தார். 

”இரண்டாம் உலகப்போரின் போது சோவியத் இராணுவத்துடன் இணைந்து நாஜிப்படையை எதிர்த்து போராடிய பிரெஞ்சு விமானிகளின் படைப்பிரிவைக் குறிக்கும் விதமாக அவர்களின் தாத்தா, கொள்ளுத்தாத்தாக்களைப் போல அவர்களின் படைப்பிரிவுக்கும் “Normandy-Niemen” என பெயரிட்டுள்ளனர்” என விளாடிமிர் புட்டின் நேற்று தெரிவித்திருந்ந்தார்.

“முக்கியமானது என்னவென்றால், எமது கொள்கைகளையும் மதிப்புக்களையும் பகிர்ந்து கொண்டவர்கள், இன்னும் பகிர்ந்து கொள்பவர்கள் எப்போதும் எங்களுடன் இருக்கின்றனர்!” என அவர் மேலும் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்துக்கள் உடனடியாகவே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்