Paristamil Navigation Paristamil advert login

ஏப்ரலில் கோடை வெப்பம் : பல்வேறு நகரங்களில் முந்தைய பதிவுகள் முறியடிப்பு!!

ஏப்ரலில் கோடை வெப்பம் : பல்வேறு நகரங்களில் முந்தைய பதிவுகள் முறியடிப்பு!!

1 வைகாசி 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 309


இந்த ஏப்ரல் மாதத்தில் பிரான்சின் பல்வேறு நகரங்களில் அதிகூடிய வெப்பம் பதிவாகி முந்தைய சாதனைகள் பலவற்றை முறியடித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இடி மின்னல் தாக்குதல்கள் ஒருபக்கம் பதிவாகி வந்த நிலையில், அதிகூடிய வெப்பமும் பதிவாகியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 30°C வெப்பம் பதிவாகிறமை மிக சாதாரண ஒன்றாக மாறியுள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. Pas-de-Calais மாவட்டத்தில் 28.5°C எனும் அதிகூடிய வெப்பம் பதிவாகியுள்ளது.

அதேபோன்று Maine-et-Loire மாவட்டத்தில் 27.2°C வெப்பம் பதிவாகியுள்ளது. 

நேற்று ஏப்ரல் 30 புதன்கிழமை வடக்கு பிரான்சின் எல்லைகளை அண்மித்து பலத்த வெப்பம் பதிவானதாகவும், கிட்டத்தட்ட அங்கு 29°C வெப்பம் வரை அளவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்