சிறைத் தேடுதலில் அதிர்ச்சிகரமான பொருட்கள்!!

1 வைகாசி 2025 வியாழன் 02:50 | பார்வைகள் : 1384
பேர்ப்பின்யோ (Perpignan) சிறையில் பெரும் பிரச்சினை நடந்துள்ளது. பேர்ப்பின்யோ சிறையில் நடந்த ஒரு பிரச்சினையை அடுத்து, சிறைக் கைதிகளின் அறைகள் தேடுதலிற்கு உள்ளாக்கப்பட்டது.
இதில் அதிர்ச்சிக்குள்ளான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அலைபேசிகள், கத்திகள், அதனையும் தாண்டி பச்சை குத்தும் கருவிகள் கூட கண்டெடுக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 'செரமிக்' இலான கத்திகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவை பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து பெரும் கலவரங்கள் மற்றும் வாய்த்தகராறுகள் ஏற்பட்டுள்ளன. சிறையதிகரிகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதன் பின்னர் சிறையதிகாரிகள் காவற்துறையினரின் உதவியை நாடியே கலவரம் அடக்கப்பட்டது.