கனடாவின் Burlington நகரில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி
30 சித்திரை 2025 புதன் 16:36 | பார்வைகள் : 3270
கனடாவின் பார்லிங்டன் Burlington நகரில் உள்ள ஒரு மான்டரின் Mandarin உணவகத்தின் வாகனநிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஆண் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஹால்டன் Halton பிராந்திய போலீசார் கொலை வழக்காக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெயார்விவ் ஸ்ட்ரீட் Fairview Street-இல் உள்ள 1881 Mandarin உணவகம் அருகே மாலை 8:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டதாக போலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இருந்த ஒரு ஆணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது திட்டமிட்டு இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எந்தவிதமான உடனடி அபாயமும் இல்லை எனவும் அவர்கள் உறுதி செய்துள்ளனர். தற்போது எந்த சந்தேக நபர் தொடர்பான தகவல்களும் வெளியிடப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan