கட்டத்தில் இருந்து விழுந்து பாடசாலை அதிபர் பலி!!

30 சித்திரை 2025 புதன் 12:34 | பார்வைகள் : 1559
பாடசாலை அதிபர் ஒருவர் அவரது வதிவிட கட்டிடத்தில் இருந்து விழுந்து பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் பல்வேறு கருதுகோள்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இச்சம்பவம் Courbevoie (Hauts-de-Seine) நகரில் உள்ள பாடசாலை வளாகத்துக்கு அருகே உள்ள உத்தியோகபூர்வ கட்டிடத்தில் இருந்து பாடசாலை அதிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று ஏப்ரல் 29 ஆம் திகதி நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அதிபர் 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து அங்கு பணியாற்றிவந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தற்கொலையா அல்லது கொலை முயற்சியா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.