நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

30 சித்திரை 2025 புதன் 09:19 | பார்வைகள் : 2353
நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில், கடல் தளத்திற்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே 5 மில்லியன் மக்கள் வசிக்கும் நியூசிலாந்தில், பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுப் பிளவுகளின் வளைவான “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ள நிலையில் அங்கு பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் பொதுவானவை என கூறப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025