சமூகத்தை உடைக்கும் மெலோன்சோன் - உள்துறை அமைச்சர்!

30 சித்திரை 2025 புதன் 08:08 | பார்வைகள் : 358
தொடர்ச்சியாக பள்ளிவாசல் கொலையை வைத்து ஜோன்-லுக் மெலான்சோன் பெரும் அரசியல் செய்து வருவதாக, பல கட்சிகள் விமர்சித்து வருகின்றன்றனர்.
«பிரான்சின் தேசியத்தையும் ஒற்றுமையையும், மெலோன்சோனும் அவர் கட்சியும் உடைத்தெறிக்க முயல்கின்றனர். நான் இதற்கு எதிராகப் போராடுவேன். பிரான்சின் ஒற்றுமைமையக் குலைக்க விடப் போவதில்லை»
என உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ தெரிவித்துள்ளார்.
«மெலோன்சோன் சமூகத்தை உடைத்தெறிவதுடன், தேசிய விவாதத்திலும் முறைகேடாக நடக்கின்றார்»
என பள்ளிவாசலில் கொல்லப்பட்ட அபூபக்கரினை தனது அரசியல் ஆயுதமாக்கி, கேவலமான அரசியல் செய்கின்றார் என உள்துறை அமைச்சர் கண்டித்துள்ளார்.