அஜித்தின் நெகிழ்ச்சியான பேட்டி..!

30 சித்திரை 2025 புதன் 09:56 | பார்வைகள் : 144
அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், அதன் பின் அவர் ஆங்கில ஊடகத்தில் பேட்டி அளித்தார். அப்போது, ‘என்னுடைய வெற்றி, சாதனை அனைத்திற்கும் ஷாலினி தான் காரணம்’ என்றும், ‘திருமணத்திற்கு முன்பே அவர் பிரபலமாக இருந்த நிலையில், எனக்காக திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு என்னுடைய பயணத்தில் ஒரு அங்கமாக இருக்க தியாகம் செய்தார்’ என்றும் தெரிவித்துள்ளார்.
‘என்னுடைய முடிவுகள் சில முறை தவறாக இருந்த போது கூட மனம் தளறாமல் என்னை ஊக்குவித்தது அவர்தான்’ என்றும், ‘என்னுடைய சாதனைகள், பாராட்டுக்கள் அனைத்தும் அவருக்கே சென்று சேர வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்த போது, ‘அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். விரைவில் நேரில் பேசுவோம்’ என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.இதனை அடுத்து, பல ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்த அஜித், விரைவில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.