அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் 5 ஹீரோயின்களா?

25 வைகாசி 2025 ஞாயிறு 13:36 | பார்வைகள் : 149
அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் ரூ.700 கோடி என்று கூறப்படுகிறது. இதில் ரூ.300 கோடி அல்லு அர்ஜுன் சம்பளம் பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. மேலும், இது ஒரு டைம் டிராவல் கதையை அம்சமாக கொண்டது என்றும், இதற்காக அமெரிக்காவில் விஷுவல் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஒரு வீடியோவும் சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது. அவர்கள் தீபிகா படுகோன், ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாக்கூர் என்று கூறப்பட்டது.
தற்போது கூடுதலாக, ‘கிங்டம்’ திரைப்படத்தில் நடித்த பாக்யஸ்ரீ இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்கு மேல் ஒரு ஹாலிவுட் நடிகையும் இதில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.