மீண்டும் 'பராசக்தி' படப்பிடிப்பு தொடங்குமா?

24 வைகாசி 2025 சனி 14:19 | பார்வைகள் : 219
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகவும், இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பதால் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா என்ற கேள்விகள் திரையுலகினர் மத்தியில் எழுந்த நிலையில், அதற்கு செய்தியாளர்கள் மூலம் சுதா கொங்கரா பதிலளித்துள்ளார்.
இது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்த போது, "பராசக்தி படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் 40 நாள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது 'மதராஸ்' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். அவர் வந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவோம்," என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சர்ச்சை குறித்த கேள்விக்கு, "அது நிறைய மீடியாவில் பேசிவிட்டார்கள். நான் இதுவரை எதுவும் சொல்லவில்லை; இதைப்பற்றி நான் பேசவில்லை," என்று தெரிவித்தார்.
மேலும், விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துடன் 'பராசக்தி' படம் ரிலீசாகும் என செய்திகள் வெளியானதே என்ற கேள்விக்கு, "அப்படி ஒரு செய்தியை நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்கள். தயாரிப்பாளர் இன்னும் ரிலீஸ் தேதியை சொல்லவில்லை," அவர் கூறினார்.
'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பை கூடிய சீக்கிரம் முடித்து விடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ப்ரித்விராஜ், குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்த 'பராசக்தி' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது இவரது 100வது படம் ஆகும். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 250 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.