உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி

23 வைகாசி 2025 வெள்ளி 11:54 | பார்வைகள் : 1934
சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது.
முன்னதாக இந்த ரோபோக்களுக்கு மனிதர்களைப் போல் நடக்கவும், நடனமாடவும், ஓடவும் அந்நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது.
இந்நிலையில், உடல் வலிமை சார்ந்து விளையாடப்படும் குத்துச்சண்டை போட்டிக்கு ரோபோக்களை தயார் செய்வதன் மூலம் அவற்றின் வேகம், செயல் திறன் உள்ளிட்டவற்றை மேலும் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி சீனாவின் ஹாங்சோ நகரத்தில் வரும் 25 திகதி நடைபெற உள்ளது.
இதற்காக மோஷன் கேப்ச்சர்(Motion capture) தொழில்நுட்பம் மூலம் இவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் வெற்றி பெறும் ரோபோவுக்கு Iron First King என்ற பட்டம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1