உடை ஆபாசம் என தெரிவித்து - இளம் பெண்ணை பேருந்தில் ஏற்ற மறுத்த சாரதி..!

21 வைகாசி 2025 புதன் 09:46 | பார்வைகள் : 1692
இளம் பெண் ஒருவரை அவரது ஆடையினை காரணம் காட்டி பேருந்தில் ஏற்ற மறுத்த சாரதி ஒருவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
108 ஆம் இலக்க பேருந்தினை செலுத்தும் சாரதி ஒருவருக்கு எதிராகவே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. Val-de-Marne மாவட்டத்தில் மே 18, ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை பேருந்து நிறுத்தம் ஒன்றில் காத்திருந்த இளம் பெண் ஒருவரை பேருந்து சாரதி ஒருவர் ஏற்ற மறுத்துள்ளார்.
இச்சம்பவம் படி குறித்த பேருந்து சாரதி விளக்கமளிக்கையில், “அப்பெண் அவரது பின்பக்கம் முழுவதுமாக தெரியும் படி ஆடை அணிந்திருந்தார். இதனால் பேருந்தில் பயணிப்பவர்கள் முகம் சுழிக்க நேரும் எனவும் கருதி அவரது ஆடையை சரிசெய்யுமாறும், பின் பகுதியை மறைக்குமாறும் நான் கோரினேன். மாறாக அவரை பேருந்தி ஏறவேண்டாம் என நான் தெரிவிக்கவில்லை!” என குறிப்பிட்டார்.
குறித்த பெண் தெரிவிக்கையில், “விளையாட்டுக்குத் தேவையான உடையினை அணிந்திருந்ததாகவும், ஆனால் அதனை விவாதிக்கவேண்டிய தேவை இல்லை எனவும், நான் என்ன உடை அணிந்திருந்தாலும் நான் பேருந்தில் பயணிக்க அனுமதி மறுக்க முடியாது!” என அப்பெண் தெரிவித்து, குறித்த சாரதி மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.