சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள கோல்டன் டோம்’ ஏவுகணை….

21 வைகாசி 2025 புதன் 09:10 | பார்வைகள் : 302
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேற்படி இரு நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில்,
‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு 175 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.