சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கிய இருவர்

19 வைகாசி 2025 திங்கள் 11:21 | பார்வைகள் : 478
சுவிட்சர்லாந்தில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு சுற்றுலாப்பயணிகள் சிக்கினார்கள்.
சுவிட்சர்லாந்திலுள்ள ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள Eiger என்னுமிடத்தில் சனிக்கிழமையன்று பனிச்சரிவு ஏற்பட்டது.
பனிச்சரிவில் ஏழு சுற்றுலாப்பயணிகள் பனிக்குள் புதைய, பொலிசார், ஹெலிகொப்டர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் அவர்களை மீட்கும் பணியில் இறங்கினார்கள்.
பனிக்குள் சிக்கியவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.