பிரித்தானியாவில் பணிக்கு சைக்கிளில் சென்றவருக்கு நேர்ந்த துயரம்
19 வைகாசி 2025 திங்கள் 08:14 | பார்வைகள் : 4294
பிரித்தானியாவின் டோர்செஸ்டர் நகரில் 50 வயது நபர் ஒருவர் கார் மீது மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
டோர்செஸ்டர் நகரின் பிரிட்போர்ட் சாலையில் கார் மற்றும் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோசமான நிலையில் அடையாளம் காணப்பட்டார்.
அவர் Airlift மூலம் சவுத்தாம்ப்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், குறித்த நபர் பணிக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது கார் மோதியதில் படுகாயமுற்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பொலிஸ் சார்ஜென்ட் டேவ் கோட்டேரில் கூறுகையில், "இந்த மோதலில் துரதிர்ஷ்டவசமாக இறந்த அந்நபரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்கள் மிகவும் உள்ளன.
இச்சம்பவத்தின் முழு சூழ்நிலையையும் நிறுவ முழுமையான விசாரணை நடத்துவது எங்கள் கடமை" என தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan