Paristamil Navigation Paristamil advert login

2030-க்குள் 26 புதிய மொடல்களை அறிமுகப்படுத்த Hyundai திட்டம்

2030-க்குள் 26 புதிய மொடல்களை அறிமுகப்படுத்த Hyundai திட்டம்

18 வைகாசி 2025 ஞாயிறு 19:12 | பார்வைகள் : 140


அடுத்த 5 ஆண்டுகளில் 26 புதிய மொடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது Hyundai.

முக்கிய ஆட்டோ மோபைல் நிறுவனமான ஹூண்டாய், 2030-ஆம் ஆண்டுக்குள் 26 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்து ஆட்டோ துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், 20 ICE வாகனங்கள் (Petrol, Diesel, CNG, Hybrid) மற்றும் 6 மின்சார வாகனங்கள் (EVs) இடம்பெற உள்ளன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹூண்டாய் தனது Creta Electric மொடலை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், Alcazar மற்றும் Tucson மொடல்களுக்கு இடையில் ஹைபிரிட் SUV ஒன்றும் வரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாகன அறிமுகத் திட்டம், ஹூண்டாயின் பாரம்பரிய வாடிக்கையாளர்கள் மற்றும் இளம் தலைமுறை ஆகியோரின் தேவைகளையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும், Tata Motors மற்றும் Mahindra போன்ற போட்டியாளர்களால் ஏற்பட்ட சந்தை அழுத்தத்தைக் குறைக்கவும் இது உதவவுள்ளது.

இதன் தொடக்கமாக, Next Gen Venue மற்றும் Ioniq 5 facelift மொடல்களை ஹூண்டாய் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் தனது சந்தை பங்கையும், தயாரிப்புகளில் பன்முகத்தன்மையையும் உறுதிப்படுத்த விரும்புகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்