மீண்டும் இணையும் கமல் - மணிரத்னம் கூட்டணி ?

17 வைகாசி 2025 சனி 17:56 | பார்வைகள் : 161
கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் ஆகியோரின் நடிப்பில் தற்போது தக் லைஃப் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகியுள்ள இப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான ப்ரொமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில்,
இந்நிலையில் தக் லைஃப் படத்தின் காம்போ மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி மணிரத்னம் – கமல் ஆகிய இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தை உருவாக்க இருக்கிறார்களா? அல்லது கமல் – சிம்பு நடிப்பில் புதிய படம் உருவாக இருக்கிறதா? அல்லது மூவரின் கூட்டணியிலும் புதிய படம் உருவாக இருக்கிறதா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 3, KH237, கல்கி ஆகிய படங்களுக்கு பிறகு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.