ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இயக்குனரா?

17 வைகாசி 2025 சனி 15:10 | பார்வைகள் : 149
விஜய், அஜித், உட்பட பல முன்னணி நடிகர்கள் தற்போது தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், அடுத்த கட்டமாக ரஜினியும் பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’கூலி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதேபோல், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர் 2’ படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ என்ற படத்தை தயாரித்தது என்பதும், தற்போது கூட, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’டியூட்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினி - மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் இந்த படத்தை இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த ஆண்டு வெளியான, நானி நடித்த ’சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.