விஷாலுக்கு கல்யாணமா?

17 வைகாசி 2025 சனி 14:10 | பார்வைகள் : 133
நடிகர் விஷாலுக்கு 47 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் ஆகும் என்று கூறப்பட்டு வந்தாலும், அது குறித்த எந்தவிதமான தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது திருமணம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், விஷால் தனது திருமணம் குறித்து கூறிய போது, “நடிகர் சங்க கட்டிடத்தை முடித்த பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். தற்போது நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்குப் பிறகு என்னுடைய திருமணம் நடக்கும்,” என்று கூறினார்.
மேலும், “பெண் பார்த்து ஆகிவிட்டது, எல்லாம் பேசி முடித்து விட்டோம். இது ஒரு காதல் திருமணம். விரைவில் மணப்பெண் குறித்த தகவலையும், திருமண தேதியையும் அறிவிப்பேன்,” என்றும் தெரிவித்துள்ளார். இதனால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.