Paristamil Navigation Paristamil advert login

உளுந்து புட்டு

உளுந்து புட்டு

16 வைகாசி 2025 வெள்ளி 17:57 | பார்வைகள் : 184


உளுந்தில் இருக்கும் சத்துக்கள் ஆண்களை விட, பெண்களுக்கு அதிகம் பயன் அளிக்கக் கூடியது. பெண்களின் இடுப்பு எலும்புகள் பலப்படும். அதனால் தான் மாதவிடாய் காலங்களில் உளுந்து கஞ்சி செய்து கொடுப்பது வழக்கம். உளுந்தை இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்க போகிறது.

தேவையான பொருட்கள்:உளுந்து, பச்சரிசி, தேங்காய் துருவல் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், நெய்

செய்முறை:

ஒரு அகலமான கடாயில் ஒரு கப் அளவிற்கு உளுந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை மிதமான தீயில் நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளலாம். உளுந்தின் நிறம் லேசாக மாறும்வரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு கப் உளுந்து, அரை கப் வீதம் பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதையும் அதே கடாயில் சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும். இப்பொழுது நாம் வறுத்த இரண்டு பொருட்களையும் சிறிது நேரம் உலர வைக்க வேண்டும்.

அதன் பிறகு இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக மையாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளலாம். அவ்வளவு தான் புட்டு செய்வதற்கான மாவு தயார்.

இந்த மாவில் தண்ணீரை லேசாக தெளித்து தெளித்து மாவு பிசைய வேண்டும். இதனுடன் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் கலந்து புட்டு பதத்திற்கு மாவை பிரட்டி கொள்ள வேண்டும்.இப்பொழுது மாவை ஒருமுறை பிடித்து பார்க்கும்போது, கொழுக்கட்டை போல கெட்டியாக பிடிபட வேண்டும்.அப்பொழுதுதான் புட்டு செய்வதற்கு சரியான பக்குவத்தில் தயாராக இருக்கும்.

இந்த மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து , இட்லி பாத்திரத்தில் மிதமான தீயில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சுவைக்கு ஏற்ப நாட்டுச்சக்கரை அல்லது வெள்ளை சர்க்கரை சேர்த்தால் சுவையான சத்தான "உளுந்து புட்டு ரெடி "

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்