Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் இந்த 5 ரகசியங்களை எப்போதும் அவங்க கணவரிடமிருந்து மறைப்பார்களாம்...

பெண்கள் இந்த 5 ரகசியங்களை எப்போதும் அவங்க கணவரிடமிருந்து மறைப்பார்களாம்...

16 வைகாசி 2025 வெள்ளி 14:12 | பார்வைகள் : 164


பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானதாகும். ஒருவர் எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும் சொல்லிக் கொண்டாலும், பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியாது. இந்த முயற்சியில் பலர் தோல்வியடைந்துள்ளனர். பெரும்பாலும் திருமணம் மற்றும் காதலில் பெரும்பாலான பெண்கள் மறைக்கும் சில ரகசியங்கள் உள்ளன. படுக்கையறையில்

ஒரு பெண் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் வெளிப்படுத்த விரும்பாத சில விஷயங்கள் உள்ளன. இந்த வகையான விஷயங்கள் பெரும்பாலும் அவர்கள் உறவில் விரிசலை ஏற்படத்தக்கூடும். பெண்கள் எப்போதும் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தங்களுடைய மோசமான குணங்கள் 
பெண்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் கெட்ட பழக்கங்களை வெளிப்படுத்த விரும்ப மாட்டார்கள். இதனால், வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும் என அஞ்சி, பலர் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக கூறத் தயங்குகின்றனர். எனவே அவர்கள் தங்கள் மோசமான நடத்தையை ஒருபோதும் வெளிப்படுத்தத் தயாராக இல்லை. காதலர் மற்றும் துணையிடம் இருந்து எப்போதும் மறைக்க விரும்புகிறார்கள்.

கடந்த கால உறவுகள் 
கடந்த கால உறவுகளைப் பற்றி சிலர் வெளிப்படையாக இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் இதைப்பற்றி பேச பயப்படுகிறார்கள். அவர்களின் உறவு மிகவும் நெருக்கமாக இருந்தால், எந்த காரணத்திற்காகவும் அவர்கள் அதைப் பற்றி பேச மாட்டார்கள். காதலர் முந்தைய உறவைப் பற்றி அறிய விரும்பாததால், இதைப்பற்றி பேசினால் அதன்பின் உறவைப் பேணுவது பெரும்பாலும் சாத்தியமற்றது. இது பெண்களை மிகவும் சிரமப்படுத்துகிறது. அதனாலேயே பெரும்பாலான பெண்கள் இதனைப்பற்றி மறைக்கிறார்கள்.

குடும்பம் பற்றிய மோசமான விஷயங்கள் 
பெண்கள் அதிகம் பயப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று. எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் காதலர் அல்லது கணவரிடம் தன் குடும்பத்தின் மோசமான பக்கத்தைப் பற்றி அவர்கள் பேசமாட்டார்கள். எப்பொழுதும் மிக ரகசியமாக வைத்திருப்பதில் அக்கறை காட்டுவார்கள். அதுமட்டுமில்லாமல் இப்படிப் பேசுவதால் குடும்பப் பெருமை போய்விடும் என்று நினைக்கிறார்கள்

தனிப்பட்ட சேமிப்பு 
பெண்கள் எப்போதும் தங்கள் சேமிப்பைப் பற்றி அவ்வளவு வெளிப்படையாக பேசுவதில்லை. ஏனென்றால் அவர்கள் அதை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்கள். பெண்கள் தனிப்பட்ட உரையாடலின் போது கூட இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேச விரும்ப மாட்டார்கள். பெண்கள் தங்கள் வயது போலவே இந்த விஷயத்தையும் ரகசியமாகவே வைத்திருக்கிருக்க விரும்புகிறார்கள்.

பாலியல் விருப்பங்கள் 
பாலியல் விருப்பங்கல் என்று வரும்போது பெண்கள் மிகவும் ரகசியமானவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடமிருந்து பாலியல் திருப்தி அடைவதில்லை, இருப்பினும் அவர்கள் இந்த விஷயத்தில் எப்போதும் அமைதியாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் எதை விரும்புகிறார்கள், எப்படி விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி பேசுவது அவசியம், ஆனால் தங்களைப் பற்றி தவறான கண்ணோட்டம் ஏற்பட்டுவிடும் என்று அச்சத்தில் அவர்கள் இதை செய்வதில்லை.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்