உலகின் முதல் ஹைட்ரஜன்-எலக்ட்ரிக் சரக்கு விமான சேவை-பிரியத்தனியாவில் தொடங்க தயார்

16 வைகாசி 2025 வெள்ளி 08:12 | பார்வைகள் : 169
உலகின் முதல் ஹைட்ரஜன்-எலக்ட்ரிக் சரக்கு விமான சேவை விரைவில் பிரித்தானியாவின் East Midlands விமான நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது.
இத்தகைய முனைப்பை ZeroAvia மற்றும் RVL Aviation இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
இந்த சேவைக்காக RVL Aviation உடைய Cessna Grand Caravan 208B வகை விமானங்கள், ZeroAvia உருவாக்கிய ZA600 ஹைட்ரஜன் எலக்ட்ரிக் பவர் ட்ரெயின் மூலம் மாற்றப்படவுள்ளது.
இது எரிபொருள் இன்றி ஹைட்ரஜன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனுடன் இணைக்கப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் விமானத்தை இயக்குகிறது.
அதன் byproduct வெறும் நீர் என்பதால் இது சுற்றுச்சூழலுக்கு மிகுந்த நன்மை தரும் தொழில்நுட்பமாகும்.
சேவை விரைவில் வர்த்தக ரீதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ்கள், பயிற்சிகள், விமான மாற்றுப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்களை ஹைட்ரஜன்-எலக்ட்ரிக் பவர் ட்ரெயின் மூலம் மாற்ற முடியும் என ZeroAvia நம்பிக்கையுடன் தெரிவிக்கிறது.
இந்த பசுமை விமான சேவை உலகளவில் சரக்கு விமானங்களின் சுற்றுசூழல் பாதிப்பை குறைக்கும் புதிய யுகத்துக்கு திறவுகோலாக அமையலாம்.