தாய் உடனான உறவு காதல் வாழ்க்கையை பாதிக்கிறதா?

15 வைகாசி 2025 வியாழன் 13:42 | பார்வைகள் : 154
நாம் உருவாக்கும் முதல் உணர்ச்சிப் பிணைப்பு பெரும்பாலும் நம் தாயுடன் தான் இருக்கும். இந்தப் பிணைப்பு காதல் இல்லையென்றாலும், பிற்கால வாழ்க்கையில் உருவாகும் நெருக்கம் உள்ளிட்டவற்றுக்கான அடித்தளமாக அமைக்கிறது. நாம் பிறரிடம் அன்பு செலுத்தும் விதம், பதிலுக்கு நாம் எதிர்பார்ப்பது மற்றும் வயது வந்த உறவுகளில் நாம் அறியாமலேயே வகிக்கும் பாத்திரங்களை நுட்பமாக இது வடிவமைக்கிறது. நமது ரொமாண்டிக் உறவுகளில் பல நம் தாய்மார்களுடன் நாம் உருவாக்கும் இத்தகைய முதல் இணைப்புகளிலிருந்து வரும் வடிவங்களை எதிரொலிக்கின்றன. ஒரு நபரின் தாயுடனான உறவு, அவரது காதலில் வெளிப்படும் விதத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை டாக்டர் சாந்தினி துக்னைட் பகிர்ந்துள்ளார்.
குழந்தைப் பருவத்தில் காதல் என்பது சாதனைகள், நல்ல நடத்தை அல்லது உணர்ச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நிபந்தனைக்குட்பட்டதாக இருந்தால், பெரியவர்கள் ஆனதும் அன்பை நாமாகவே பெற வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள். உறவுகளில், இது அதிகமாக பரிசுகள் கொடுப்பது, மக்களை மகிழ்விப்பது அல்லது பாசத்திற்கு தகுதியானவராக உணர ஒருவரின் தேவைகளை கட்டுப்படுத்துவது போல் தோன்றலாம்.
பாலினப் பாத்திரங்கள், சுய வெளிப்பாடு அல்லது உணர்ச்சி ரீதியான பாதிப்பு குறித்து உங்கள் தாய் வலுவான எண்ணங்களை வைத்திருந்தால், குழந்தையாக இருக்கும்போது பிறரது அங்கீகாரத்தைப் பெறுவதற்காக உங்களது அடையாளத்தின் முக்கிய கூறுகளை அடக்கி வைக்கக்கூடும்.
நம்பிக்கை துரோகம், உணர்ச்சி ரீதியான புறக்கணிப்பு, கணிக்க முடியாத தன்மை அல்லது விமர்சனம் ஆகியவற்றை உங்கள் தாய்வழி பந்தம் உள்ளடக்கியிருந்தால், நெருக்கமான இடங்களில் பாதுகாப்பாக உணர சிரமப்படலாம்.
உணர்ச்சிப்பூர்வமான பாத்திரங்கள் தெளிவாக இல்லாத குடும்பங்களில், ஒரு குழந்தை தாய்க்கு மாற்று துணையாகவோ அல்லது "உணர்ச்சிபூர்வமான துணையாகவோ" நிலைநிறுத்தப்படலாம். இது வயது வந்த காலத்தில் உறவு சிக்கல்களை உருவாக்குகிறது. இதனால் அந்த நபர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நெருக்கத்தைத் தவிர்க்கலாம்.
தாய்மார்கள் உணர்ச்சிபூர்வமான அதிகாரத்தைப் பேணும் அல்லது கடுமையான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் குடும்பங்களில், வயது வந்த குழந்தைகள் தங்கள் தாய் ஏற்றுக்கொள்ளாத துணையைத் தேர்ந்தெடுக்கும்போது குற்ற உணர்வை அனுபவிக்க நேரிடும்.
பழக்கமானதாகத் தோன்றுவது, அது இல்லாதபோதும் கூட, பெரும்பாலும் பாதுகாப்பாக உணர வைக்கிறது. இதனால் தங்களை அறியாமலேயே தங்கள் தாயுடனான தங்கள் பிணைப்பின் உணர்ச்சித் தொனியைப் பிரதிபலிக்கும் உறவுகளைத் தேடலாம். ஏனெனில் இது அவர்கள் வளர்ந்த உணர்ச்சி சூழ்நிலைகளை பிரதிபலிக்கிறது. காதல் உறவுகள் பெரும்பாலும் உங்கள் ஆரம்பகால உணர்ச்சி சார்ந்த வாழ்க்கையின் கண்ணாடியாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் தாயுடனான உறவு உங்கள் காதல் உறவுகளைத் தீர்மானிப்பதில்லை; ஆனால் அது நீங்கள் தொடங்கப் போகும் உறவை வடிவமைக்கிறது. இந்த வடிவங்களைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம், நிகழ்காலத்தில் வித்தியாசமாகத் தேர்ந்தெடுப்பதன் சக்தியைப் பெறுவீர்கள். காதல் என்பது நீங்கள் முழுமையாகவும் சுதந்திரமாகவும் பெற அனுமதிக்கும் ஒன்றாக மாறும்போது குணப்படுத்துதல் தொடங்குகிறது.