பரிஸ் : வீதியில் வைத்து இருவர் கடத்தல் முயற்சி!!

13 வைகாசி 2025 செவ்வாய் 12:54 | பார்வைகள் : 737
ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரை தாக்கி, அவர்களை கடத்தல் முயற்சி ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.
பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் மே 13, செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ள்ளது. கடத்த முற்பட்ட இருவரும் ‘கிரிப்டோகரன்ஸி’ நிறுவனம் ஒன்றின் உரிமையாளரது உறவினர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களை பணத்துக்காக கடத்த முற்பட்டதாக அறிய முடிகிறது.
முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வாகனம் ஒன்றில் வந்து குறித்த இருவரையும் கடத்த முற்பட்டபோது, பாதசாரி ஒருவர் தலையிட்டு அவர்களை காப்பாற்றியுள்ளார். கடத்தல்காரர்களிடம் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை
அவர் பறித்துவிட்டு அவர்களை கீழே தள்ளி விழுத்திவிட்டு தப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் குற்றவியல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.