ஜெரார் தெப்பாடியூ -குற்றவாளி - சினிமா உலகம் திகைக்க வவைக்கும் தீர்ப்பு!

13 வைகாசி 2025 செவ்வாய் 12:38 | பார்வைகள் : 1544
பிரஞ்சு சினிமாவின் பாரம்பரியமான முகம் ஜெரார் தெப்பாடியூ(Gérard Depardieu)பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் குற்றவாளி என பரிஸ் நீதிமன்றம் தீர்ப்புh அறிவித்துள்ளது.
அவர் மீது புகார் தெரிவித்தவர்கள் 54 வயதுடைய அமேலி (54) மற்றும் 34 வயதுடைய சாரா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) மாற்றம்) ஆகியோர், 2021-இல் Les Volets verts படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சம்பவங்களை விவரித்தனர்.
அமேலி மற்றும் சாரா என்பவர்களின், முறைப்படி கூறிய உணர்வுபூர்வமான சாட்சிகள், நீதிமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
அமேலி, நடிகரால் கட்டாயமாகக் கையாளப்பட்டதையும், அவமதிக்கப்படும் வார்த்தைகளை சுட்டிக்காட்டினாள். சாரா, திரை படப்பிடியின் இடையே தெப்பார்டியூ தனது மேல் கை வைத்ததாக கூறினார்.
இவர் தெப்பார்டியூ கூறியதாகச் சொன்ன வார்த்தைகள் நாகரிகம் கருதி எழுதப்படவில்லை.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:
குற்றவாளியாக தீர்ப்பு.
பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் இவர் பெயர் சேர்ப்பு.
அரசியல் தகுதி 2 ஆண்டுகள் நீக்கம்.
நடிகரின் வழக்கறிஞர், Jeremie Assous, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாகவும், இந்த வழக்கு 'பொதுமக்கள் மனநிலையின் தாக்கத்கை வைத்தே முடிவு செய்யப்பட்டதாக' விமர்சித்தார்.
இதுவரை தெப்பார்டியூ மீது 20க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளன, சில வழக்குகள் காலாவதியாகிவிட்டதால் நிறைவு பெற்றன.