சுவிட்சர்லாந்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 15 வயது சிறுமி - மற்றொரு சிறுமி கைது

13 வைகாசி 2025 செவ்வாய் 11:42 | பார்வைகள் : 951
சுவிட்சர்லாந்தில் 15 வயது சிறுமி ஒருத்தி குத்திக்கொல்லப்பட்ட வழக்கில், 14 வயது சிறுமி ஒருத்தி கைது செய்யப்பட்டுள்ளாள்.
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Berikon என்னுமிடத்தில், ஞாயிற்றுக்கிழமையன்று, மரங்களர்ந்த ஒரு பகுதியில், 15 வயது சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள்.
அவள் உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்துள்ளன. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருத்தி கைது செய்யப்பட்டுள்ளாள்.
அவளது உடலிலும் காயங்கள் இருந்ததால் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். என்றாலும், அவள் படுகாயமடையவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு தொடர்ந்துள்ள பொலிசார், என்ன நடந்தது என்பதை அறிவதற்காக சாட்சியங்களைத் தேடிவருகிறார்கள்.