ரோடியோ - கொலை மிரட்டலும் தாக்குதலும்!

13 வைகாசி 2025 செவ்வாய் 00:48 | பார்வைகள் : 264
ரோடீயோ குற்றச்செயலில் தலையீடு செய்ததற்காக Assevent (Nord) நகரின் பெண் நகரபிதா Marjorie Mahieux மிரட்டப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளார்.
மார்ஜோரி மகியு தனது கணவருடன் சேர்ந்து ஒரு நகர ரோடீயோவை (சாலை ஒற்றைச்சில் மோதல் நிகழ்வு) நிறுத்த முயற்சித்ததற்குப் பிறகு, மிரட்டப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளார்.
மார்ஜோரி மகியூ, தனது நகரின் ஒரு தரிப்பிடப் பகுதியில், மூன்று வாகனங்களளுடன் ஒற்றைச்சில் உந்துருளி ஓட்டமான ரோடியோவை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தார். இந்த சம்பவம் இரவு 8:30 மணியளவில் நடைபெற்றது. சூழ்நிலை கட்டுப்பாட்டை மீறியதால் மேயர் மிரட்டப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளார்.
தனது கணவருடன் சேர்ந்து நகரபிதர், குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களிடம் ஆவணங்களை கோரினார். இந்தக குற்றவாளிகள், அவர் நகரபிதா என்பதையும் பரிசீலிக்காமல், ஆவணங்களை வழங்க மறுத்தனர்.
மார்ஜோரி மகியூவின் கணவர், ஓர் உந்துருளிச் சாரதியிடம் பேச முயற்சித்தபோது, அந்த நபர் திடீரென வாகனத்தை இயக்கி, அவரை மோதப்படும்படி செய்தார். மற்றொரு நபர், "இவன் சவப்பெட்டியில் தான் முடியப் போகின்றான்" என எச்சரித்தவாறு அங்கிருந்து ஓடி உள்ளனர்.
இரவு 10:45 மணிக்கு, நகரபிதாவின் கணவர் Maubege காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். நகரபிதா சம்பவத்தின் காணொளிப்பதிவையும் வழங்கி உள்ளார்.
குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, நகர ரோடியோக்கள் பிரான்ஸில் ஒரு பெரும் தொல்லையாக மாறியுள்ளன. சமீபத்தில், நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன், நகர ரோடீயோ குற்றங்களில் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்ட நபர்களின் வாகனங்களை முறையாக பறிமுதல் செய்ய, ஒரு சுற்றறிக்கையின் மூலம் உத்தரவு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.