Paristamil Navigation Paristamil advert login

சோயா சுக்கா..

சோயா சுக்கா..

12 வைகாசி 2025 திங்கள் 18:05 | பார்வைகள் : 114


பொதுவாக, சோயா சங்க்ஸ் பலருக்கும் பிடிக்கும். இந்த சோயா சங்க்ஸ் "மீல் மேக்கர்" என்றும் அழைக்கப்படும். சோயா சங்க்ஸை கூட்டு, பொறியல், சுக்கா, வறுவல் அல்லது பிரியாணி வகைகளில் சேர்ப்பார்கள். இது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில், சோயா சுக்கா எப்படி செய்வது என்பது பற்றி இன்று இந்த பதிவில் பார்க்கலாம். சோயா சுக்கா என்பது சோயா சங்க்ஸை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு உணவு ஆகும். இது சுவையில் மட்டன் சுக்காவை போலவே இருக்கும். ஆனால், இது ஒரு சுவையான சைவ உணவு ஆகும்.

சோயா சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:

சோயா சங்க்ஸ் (மீல் மேக்கர்) - ஒரு கப்
வெங்காயம் - 2 பெரியது (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சோம்பு தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன
எண்ணெய் - 3 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிதளவு
சோயா சுக்கா மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள்:
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
இலவங்கப் பட்டை - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

சோயா சங்க்ஸை சூடான நீரில் 5 முதல் 10 நிமிடம் ஊறவைக்கவும்.

சோயா சங்க்ஸை வடிகட்டி, தண்ணீரை பிழிந்து எடுக்கவும்.

ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.

பெருங்காயம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சோம்பு தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

வடிகட்டிய சோயா சங்க்ஸை சேர்த்து வதக்கவும். பொடித்து வைத்த சுக்கா பொடியை சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து, கடாயை மூடி வைத்து 5 முதல் 10 நிமிடம் வேக வைக்கவும்.பின்னர் மல்லி இலைகளால் தூவி பரிமாறவும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்