சந்தானம் படத்துக்கு சிக்கல்?

12 வைகாசி 2025 திங்கள் 18:05 | பார்வைகள் : 149
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் - காமெடி படமாக இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ (DD Next level) என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் பாடலில் பெருமாள் பாடலான 'கோவிந்தா கோவிந்தா' பாடலின் வரிகளும் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம் பெற்றுள்ளதாகவும் இதனை திரைப்படத்தில் தடை செய்ய வேண்டும், நடிகர் சந்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. இதனால் சந்தானம் படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் சந்தானம் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.