சாட்சியமளிக்க பரிஸ் நீதிமன்றத்துக்கு வருகிறார் கிம் கடாஷியன்!!

12 வைகாசி 2025 திங்கள் 16:36 | பார்வைகள் : 491
அமெரிக்காவின் பிரபல மொடலும், நடிகையுமான கிம் கடாஷியனி ஒன்பது மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமை அறிந்ததே. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நாளை மே 13, செவ்வாய்க்கிழமை கிம் கடாஷியன் நீதிமன்றத்துக்கு வருகை தர உள்ளார்.
நீதிமன்ற விசாரணைகளுக்காக கடந்த வாரம் பரிசுக்கு வருகை தந்துள்ள அவர், விசாரணைகள் முடியும் வரை பரிசிலேயே தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு கிம் கடாஷியன் பரிசில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது அவரது அறையில் இருந்து 9 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன. அதில் 3.5 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள அவரது மோதிரமும் உள்ளடங்குகிறது.
இந்நிலையில், கொள்ளையர்கள் அனைவரும் கைது செய்யப்படுள்ளனர். அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அவர் நீதிமன்றத்துக்கு வருகை தர உள்ளார். நீதிபதிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க உள்ளார்.
**
கிம் கடாஷியனின் முன்னாள் காதலனும் சொல்லிசை பாடகருமான கென்யே வெஸ்ட் குறித்த 3.5 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள மோதிரத்தை அவருக்கு பரிசளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.