நடிகர் விஷால் திடீரென மயங்கியது ஏன்?

12 வைகாசி 2025 திங்கள் 12:53 | பார்வைகள் : 174
தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு நடத்தி வரும் 2025 ஆம் ஆண்டின் கூவாகம் திருவிழா விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து விழா குழுவினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. உணவு மாற்றம் மற்றும் காற்று பற்றாக்குறை காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் உடனடியாக அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து அவர் ஓய்வெடுக்க சென்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
முன்னதாக இந்த விழாவில் நடிகர் விஷால் பேசிய போது ’திருநங்கைகள் அனைவரும் மதிப்புக்குரியவர்கள் என்றும், சமூகத்தில் உயர்ந்த நிலையை அவர்கள் அடைய என்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றும் தெரிவித்தார். மேலும் மக்கள் பிரதிநிதியாக திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்றும், இதற்காக அவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.