சொத்துக்களை தானம் செய்யும் பில்கேட்ஸ்

12 வைகாசி 2025 திங்கள் 07:50 | பார்வைகள் : 161
உலக கோடீஸ்வர வர்த்தகரான பில் கேட்ஸ் அவருடைய சொத்துக்களில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களை சமூகத்துக்குத் திரும்பத் தரும் பொறுப்பு உள்ளது என, தாம் புத்தகம் ஒன்றில் வாசித்துள்ளதாக பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த 20 ஆண்டுகளில் கேட்ஸ் அறக்கட்டளை மூலம் தம்முடைய சொத்துக்களில் 99 சதவீதத்தை உலகம் முழுவதும் நன்கொடையாக வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வறுமை ஒழிப்பு, தொற்று நோய்களுக்குத் தீர்வு காண்பது, தாய் மற்றும் சேய் இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகிய மூன்று விடயங்களில் கேட்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.