Paristamil Navigation Paristamil advert login

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?

11 வைகாசி 2025 ஞாயிறு 18:24 | பார்வைகள் : 200


சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினி தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதேசமயம் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோழிக்கோடு பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதாவது ஏற்கனவே நடிகர் ரஜினி, வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் இயக்குனர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுந்தர். சி, ரஜினியின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் ரஜினி, ஹெச். வினோத்தை சந்தித்து கதை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வீர தீர சூரன் படத்தின் இயக்குனர் அருண்குமாரும், ரஜினியை சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. எனவே ஹெச். வினோத், அருண்குமார் ஆகியோர் ரஜினியை சந்தித்து பேசியிருப்பது அவருடைய அடுத்த படத்திற்காக கூட இருக்கலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்