போர்க்காலத்தில் மக்ரோனின் இரண்டாவது விஜயம்! - மெழுகுவர்தியுடன் ஜனாதிபதி -

10 வைகாசி 2025 சனி 11:01 | பார்வைகள் : 288
உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் தற்போது இரண்டாவது தடவையாக உக்ரைன் சென்றுள்ளார்.
முதற்தடவையாக 2022 ஆம் ஆண்டு ஜேர்மனியின் அப்போதைய அதிபர் Olaf Scholz உடன் சென்றிருந்தார்.
தற்போது பல நாடடின் தலைவர்களுடன் உக்ரைன் சென்றுள்ள எமானுவல் மக்ரோன், போரில் வீழந்து பட்டவர்களிற்காக ஏற்றிவைக்கப்பட்ட கொடிகளின் முன்னால், ஆறு மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செய்துள்ளார்.
மக்ரோன் உட்பட பல நாட்டுத் தலைவர்கள் அங்கு சென்றிருப்பது, ஒரு நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் என, நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி விளாதிமிர் செல்ன்ஸ்கி தெரிவித்துள்ளார்.