வாயுக்கசிவு - மரணமும் உயிராபத்தும்!!

14 சித்திரை 2025 திங்கள் 21:23 | பார்வைகள் : 1530
பரிசின் 11வது பகுதியில் உள்ள «On air» எனப்படும் உடற்பயிற்சி மையத்தில், சூடான மறறும் அதிகுளிரான ஆவி சிகிச்சை எனப்படும் cryothérapie இயந்திரத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் பெரும் அனர்த்தம் நிகழந்துள்ளது.
இந்த இயந்திரத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் இதன் பணியாளர் ஒருவர் சாவடைய, அங்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூடான மறறும் அதிகுளிரான ஆவி சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாவு, இயந்திரத்தின் வாயுக் கசிவினால் ஏற்பட்டது என்பதை, உடற்கூற்று ஆய்வின் பின்னரே உறுதி செய்ய உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த உடற்பயிற்சிக் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.