Paristamil Navigation Paristamil advert login

உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கு வறுவல்

14 சித்திரை 2025 திங்கள் 15:53 | பார்வைகள் : 280


பொதுவாக காய்கறி விரும்பாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுற ஒரே காய்கறி என்றால் அது உருளைக்கிழங்கு தான். அதுவும் உருளைக்கிழங்கு வறுவல் என்றால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். நான்வெஜ்கே டப் தர அளவிற்கு உருளைக்கிழங்கு வறுவல் செய்து சாப்பிடலாம். அந்தளவுக்கு உருளைகிழங்கு தனித்துவமாக சுவை கொண்டதாக காணப்படுகின்றது.

தேவையான பொருட்கள்: சீரகம் ஒரு தேக்கரண்டி, இஞ்சி ஒரு துண்டு, பச்சை மிளகாய் ஒன்று மல்லி இலை, காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி, மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை: எடுத்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன்பிறகு,200 கிராம் உருளைக்கிழங்கை வேகவைத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதனை வறுக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கும் சேர்த்து நன்கு மொறுகும் வரை வறுத்தெடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார். இதனை அப்படியே சாம்பார் சாதம் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்