Paristamil Navigation Paristamil advert login

காவல்துறை வீரர் தற்கொலை!

காவல்துறை வீரர் தற்கொலை!

14 சித்திரை 2025 திங்கள் 10:44 | பார்வைகள் : 5509


49 வயதுடைய காவல்துறை வீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இவ்வருடத்தில் பதிவாகும் காவல்துறையினரின் எட்டாவது தற்கொலை இதுவாகும்.

Jarville-la-Malgrange (Meurthe-et-Moselle) நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த குறித்த வீரர், நேற்று ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். Padoux (Vosges) நகரில் உள்ள அவரது வீட்டுக்கு விடுமுறையில் சென்றிருந்தபோது,  சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத் தானே சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. CRS 39 படைப்பிரிவு வீரரான அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்வருடத்தில் இடம்பெறும் காவல்துறையினரின் எட்டாவது தற்கொலை இதுவாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்