பிரெஞ்சு Riviera இல் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

11 சித்திரை 2025 வெள்ளி 06:54 | பார்வைகள் : 2508
2024 ஆம் ஆண்டில் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் வருகை 20% ஆக உயர்ந்துள்ளது. இது அட்லாண்டிக் முழுவதும் இருந்து நைஸ் (Nice) பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் விருப்பத்தை காட்டுகிறது.
சராசரியாக ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி தங்குமிடம் தவிர்த்து ஒரு நாளைக்கு 200 யூரோக்கள் வரை அங்கு செலவிடுகிறார். ஒரு பிரெஞ்சு சுற்றுலாப் பயணி சராசரியாக "ஒரு நாளைக்கு 70 யூரோக்கள்" வரை செலவிடுகிறார். இது அமெரிக்கர்களை மிகவும் வலுவான வாங்கும் திறன் கொண்டவர்களாக காட்டுகிறது. இதனால் உள்ளூர் வர்த்தகர்கள் அதிக இலாபம் அடைகின்றனர்.
தொடர்ந்து பொதுமக்களை கவர, Côte d’Azur மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு, அமெரிக்காவில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தை அமைக்க சுற்றுலா அலுவலகம் திட்டமிட்டுள்ளது.