Paristamil Navigation Paristamil advert login

மரின் லூப்பனின் தண்டணை - நீதிபதிக்குக் கொலை மிரட்டல்!

மரின் லூப்பனின் தண்டணை - நீதிபதிக்குக் கொலை மிரட்டல்!

8 சித்திரை 2025 செவ்வாய் 13:45 | பார்வைகள் : 6579


மரின் லூப்பனிற்கு ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் பங்குபெற முடியாது என்ற தகுதியிழப்பும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த தண்டனையை வழங்கிய நீதிபதிக்குக் கொலை மிரட்டல் நடந்துள்ளது. இந்த கொலை மிரட்டலைத் தொடர்ந்து ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

76 வயதுடைய இந்த நபர், தனது X தளத்தில் நீதிபதியை « இந்த நாய்க்கு என்ன தகுதி உள்ளது» எனத் தெரவித்துள்ளதுடன், பிரெஞ்சுப் புரட்சி வரை மரணதண்டனை வழங்கப்படும் Guillotine  எனப்படும் தலைவெட்டும் கருவியின் படத்தையும் வெளியிட்டு உயிரச்சுதல் விடுத்துள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டு பொபினி காவற்துறையினால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்