முக்காட்டை நீக்கச் சொன்னதற்காக அவமானப்படுத்தப்பட்ட ஆசிரியர் - வழக்கு!!

5 சித்திரை 2025 சனி 09:33 | பார்வைகள் : 3057
கடந்த 27ம் திகதி நோந்த் நகரில் உள்ள கொலேஜ் ஒன்றில் நடந்த சம்பவத்திற்கு தற்போது கொலேஜ் அளவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குறிப்பட்ட கொலேஜில் ஒரு இஸ்லாமியப் பெண் முழுமையான முக்காடு அணிந்து வகுப்பில் இருந்துள்ளார்.
இதனால் இந்தக் குறிப்பிட்ட ஆசிரியர், வகுப்பினுள் முக்காட்டை நீக்குமாறும், கொலேஜை விட்டு வெளியெறியதும் மீண்டும் போடுமாறும் கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் முக்காட்டை நீக்கி உள்ளார்.
இவ்வளவும் சுமூகமாகவே நடந்துள்ளது.
கொலேஜ் முடிந்து வீடு திரும்பும் போது ஒரு பூங்காவின் ஊடே இந்த ஆசிரியர் சென்றவேளை, அந்த முக்காடு அணிந்த மாணவியும் அவரது இஸ்லாமிய நண்பிகளும் சேர்ந்து, ஆசிரியரைத தரக்குறைவாகப் பேசி அதனை தொலைபேபசியில் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்துள்ளனர்.
ஆசிரியர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, குறிப்பிட்ட மாணவிக்கு கொலேஜ் தண்டனை வழங்கி உள்ளது.
பிரான்சில், பொது இடத்தில் அவரது அனுமதி இல்லாமல் ஒளிப்பதிவு செய்து அதனை தரவேற்றம் செய்தால் சிறைத்தண்டனையும் 45.000 யூரோ குற்றப்பணமும் விதிக்கப்படும். புகைப்படம் எடுத்து தரவேற்றம் செய்தால் சிறைத்தண்டனையும் 15.000 யூரோக்கள் குற்றப்பணமும் விதிக்கப்படும்.
தொடர இருக்கும் நீதி சவிசாணையில், மாணவிகளிற்கு என்ன தண்டனை வழங்கப்பட உள்ளது எனக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.