கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
5 சித்திரை 2025 சனி 14:32 | பார்வைகள் : 3319
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார். பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட பிரதமர் மோடி, நேற்று (ஏப்ரல் 04) இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார்.
அங்கு அவரை, இலங்கையின் மூத்த 6 அமைச்சர்கள் விஜிதா ஹெராத், நலிந்த ஜெயடிஸ்சா, அனில் ஜயந்தா, ராமலிங்கம் சந்திரசேகர், சரோஜா சாவித்ரி பால்ராஜ், கிறிஸ்ஹந்தா அபேசேனா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில், இன்று இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடியை அதிபர் அநுர குமார திசநாயக வரவேற்றார்.
கொழும்பு நகரில் இலங்கை அதிபர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan