உள்துறை அமைச்சர் மீது கடும் கோபம்!! அனைத்திற்கும் தாமதம்!!

28 சித்திரை 2025 திங்கள் 09:34 | பார்வைகள் : 458
பள்ளிவாசல் தாக்குதல் நடந்த வெள்ளிக்கிழமை அன்றே உள்துறை அமைச்சர் அந்த இடத்திற்குச் சென்றிருக்கவேண்டும.
ஒருவர் மீது பத்திற்கும் மேற்பட்ட குத்துக்கள் குத்திக் கொன்று விட்டுத் கொலையாளி தப்பியோடி இத்தாலிலில் சரணடையும் வரை நாம் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
என Hauts-de-France மாநிலத்தின் தலைவர் சவியே பேர்த்ரோன் (Xavier Bertrand) குற்றம் சாட்டியுள்ளார்.
«உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெயூ மத நம்பிக்கைகளிற்கான அமைச்சரும் கூட. இவர் உடனடியாக அங்கு சென்னறிருக்க வேண்டும் என்பதற்கு மாற்றுக்ருத்து இல்லை»
«இஸ்லாமியர் என்பதற்காவே இந்தக் கொலை நடந்துள்ளது. இதற்கு தார்மீகக் கோபம் வரவேண்டும். ஆனால் உள்துறை அமைச்சரின் கோபம் ஒவ்வொன்றிற்கு ஒன்றாக மாறிக் கொண்டிருக்கின்றது»
«ஒரு இஸ்லாமியன் தேசத்திற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதவைச் செய்யும் போது வரும் கோபம் இதற்கும் வவேண்டும்»
«அவர்கள் தங்கள் மத வழிபாட்டை நிம்மதியாகச் செய்ய மட்டும் தான் கேட்கின்றார்கள். அதற்கான பாதுகாப்மை நாம் வழங்கத் தவறுகின்றோம்»
என சவியே பேர்த்ரோன் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.