Paristamil Navigation Paristamil advert login

வான்கூவர் திருவிழா கூட்டத்தினரிடம் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கூறிய ஒற்றை வார்த்தை

வான்கூவர் திருவிழா கூட்டத்தினரிடம் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கூறிய ஒற்றை வார்த்தை

28 சித்திரை 2025 திங்கள் 05:10 | பார்வைகள் : 222


கனடாவில் வான்கூவர் திருவிழா கூட்டத்தின் மீது வாகனத்தை மோதவிட்டு 9 பேர்கள் கொல்லப்பட காரணமான நபர் கூறிய ஒற்றை வார்த்தை தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வான்கூவரில் Lapu Lapu Day திருவிழாவின் போதே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 8 மணிக்குப் பிறகு மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் ஒன்று மோதியது.

இச்சம்பவம் தொடர்பாக 30 வயது நபர் ஒருவர் கைதாகியுள்ளார். சம்பவம் நடந்த தெற்கு வான்கூவரில் ஒரு குறுகிய தெருவில் சடலங்களும் காயமடைந்தவர்களும் என உடல்கள் சிதறிக்கிடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் முன் பாகம் சேதமடைந்தும் காணப்பட்டுள்ளது.

வெளியான காணொளி ஒன்றில், கருப்பு நிற ஹூடி அணிந்த ஒரு இளைஞன், சங்கிலியால் பிணைக்கப்பட்ட வேலியில் முதுகை சாய்த்துக் கொண்டு,ஒரு பாதுகாப்புக் காவலருடன், அவரைச் சுற்றி கூச்சலிடும் மற்றும் திட்டும் பார்வையாளர்களால் சூழப்பட்டிருக்கிறான். அந்த மக்களை நோக்கி அவன், வருந்துகிறேன் என்ற ஒற்றை வார்த்தையை குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, வான்கூவர் காவல்துறையின் இடைக்காலத் தலைவர் ஸ்டீவ் ராய், காணொளி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், தாக்குதலில் ஈடுபட்ட நபர் தனித்துச் செயல்பட்டதாகவும், சில சூழ்நிலைகளில் கைதான அந்த நபர் காவல்துறையினருக்குத் தெரிந்தவர் என்றும் ஸ்டீவ் ராய் தெரிவித்துள்ளார்.

வான்கூவரில் Lapu Lapu Day திருவிழாவின் போது, பொதுவாக குடும்பங்கள், சிறார்கள் மற்றும் வான்கூவர் முழுவதிலுமிருந்தும் மக்கள் திரண்டு வருவது வழக்கம். ஆனால் இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று எவரும் கணித்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான தரவுகளின் அடிப்படையில், வான்கூவரில் 38,600 க்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் பாரம்பரிய குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர், இது நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் 5.9 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று புள்ளிவிவர கனடா தெரிவித்துள்ளது.

இருப்பினும் கைதான நபர் தொடர்பில் உறுதியான தகவல் எதையும் பொலிஸ் தரப்பு இதுவரை வெளியிடவில்லை.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்